உங்களுடன் ஸ்டாலின் திட்டம் (USS) மற்றும் அம்மா திட்டம்
July 24 , 2025 3 days 114 0
பொதுமக்களின் உண்மையான குறைகளை மனு அளித்த நாளிலிருந்து 45 நாட்களுக்குள் நிவர்த்தி செய்வதற்காக, ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் உள்ள அனைத்து முக்கிய அரசுத் துறைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் (USS) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அனைத்து கிராமங்களிலும் உள்ள விளிம்பு நிலை மக்களுக்கு உறுதியளிக்கப்பட்ட அதிகபட்ச சேவை (AMMA) என்ற திட்டத்தினை போன்றே உங்களுடன் ஸ்டாலின் திட்டம் (USS) தொடங்கப்பட்டு உள்ளது.
ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது முந்தைய AIADMK அரசாங்கத்தால் AMMA திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இந்த இரண்டு திட்டங்களும் மக்களின் வீட்டு வாசலிற்கே சென்று அரசுச் சேவைகளை வழங்குதல் என்ற பொதுவான ஒரு நோக்கத்தைக் கொண்டுள்ளன
மக்களின் குறைகளைத் தீர்ப்பதைத் தவிர, இந்த இரண்டு திட்டங்களும் பல்வேறு திட்டங்களின் கீழ் புதிய பயனாளிகளைச் சேர்ப்பதற்கும் வழி வகுக்கின்றன.
2013 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் (AMMA திட்டத்தில்) மற்றும் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் (USS திட்டத்தில்) வெளியிடப்பட்ட அரசாங்க உத்தரவுகளின் ஆய்வுப் படி, இந்த இரண்டு திட்டங்களும் நோக்கத்தில் வேறுபடுகின்றன.
இரண்டு திட்டங்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாடு என்னவென்றால், AMMA திட்டம் கிராமப்புறங்களில் உள்ளவர்களை மட்டுமே கவனித்துக் கொண்டாலும், USS திட்டம் நகர்ப்புறங்களில் உள்ள மக்களையும் உள்ளடக்கும்.
பொதுத் துறை (முதல்வரின் முகவரி) வெளியிட்ட அரசாணையின்படி, அடுத்த நான்கு மாதங்களில் (நவம்பர் வரை) மொத்தம் 10,000 முகாம்கள் நடத்தப் படும்.
இதில் நகர்ப்புறங்களில், 3,768 முகாம்களும், கிராமப்புறங்களில், 6,232 முகாம்களும் நடத்தப்படும்.
மாவட்டங்களில், சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 432 முகாம்களும், அதைத் தொடர்ந்து சென்னை (400) மற்றும் திருவள்ளூர் (389) ஆகிய மாவட்டங்களில் இந்த முகாம்களும் நடத்தப்பட உள்ளன.
தற்போதைய அரசாங்கத்தின் சமீபத்திய முயற்சியானது, 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நகர்ப்புறங்களில் தொடங்கப்பட்டு படிப்படியாக மீதமுள்ள பகுதிகளுக்கு நீட்டிக்கப்பட்ட மக்கள் முதல்வரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.
USS திட்டம் "வீடு வீடாகச் சென்று பிரச்சாரம்" என்ற நோக்கத்துடன் தொடங்கப் பட்டது.
உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்பது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்ட அரசாங்கத்தின் மற்றொரு மக்கள் தொடர்புத் திட்டமாகும்.
இங்கு ஆட்சியர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் ஒரு குறிப்பிட்ட தாலுகாவில் 24 மணி நேரம் தங்கி அங்கு கள ஆய்வுகளை மேற்கொள்வார்கள் என்பதோடு பொதுமக்களுடன் உரையாடி, அரசுத் திட்டங்கள் குறித்த கருத்துகளையும் பெறுவார்கள்.
2021 ஆம் ஆண்டில் முதல்வரின் முகவரி திட்டம் தொடங்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டில் மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்டது.