நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, R.சுபாஷ் ரெட்டி, M.R. ஷா மற்றும் அஜய் ரஸ்தோனி ஆகியோர் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர்.
இந்த நான்கு புதிய நீதிபதிகளின் நியமனத்திற்குப் பிறகு, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையானது 24லிருந்து 28ஆக உயர்ந்திருக்கின்றது.
உச்சநீதிமன்றம் 31 நீதிபதிகள் என்ற எண்ணிக்கை வரையில் கொண்டிருக்க அனுமதி பெற்றிருக்கின்றது.
இவ்வருடம் நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் குரியன் ஜோஸ் என்ற இரண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவி ஓய்வு பெற உள்ளனர். 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நீதிபதி A.K. சிகிரி பதவியிலிருந்து ஓய்வு பெற உள்ளார்.