TNPSC Thervupettagam

உச்ச நீதிமன்றத்தின் பாலின உணர்திறன் தீர்ப்பு அறிக்கை

August 12 , 2026 21 hrs 0 min 76 0
  • பாலினப் பாகுபாடுகளை எதிர்த்துப் போராடுவதற்கான 2023 ஆம் ஆண்டின் கையேட்டை மாற்றி, Judgments and Gender: Sensitivity and Compassion in Writing Judgments என்ற அறிக்கையை இந்திய உச்ச நீதிமன்றம் வெளியிட்டது.
  • வழக்குத் தொடுப்பவர்’ (prosecutrix) என்ற வார்த்தைக்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவர், தப்பியவர் அல்லது புகார்தாரர் போன்ற நடுநிலையான சொற்களைப் பயன்படுத்த இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.
  • அறநெறி சார்ந்த மொழி, பாதிக்கப்பட்டவரைக் குறை கூறுதல் மற்றும் தப்பியவரின் கடந்த கால பாலியல் வரலாறு குறித்த தேவையற்ற கேள்விகளைத் தவிர்க்குமாறு நீதிமன்றங்களை இது கேட்டுக் கொள்கிறது.
  • மன அதிர்வு குறித்த விழிப்புணர்வுடன் கூடிய அணுகுமுறை, சாட்சிகளை மரியாதையுடன் நடத்துதல் மற்றும் தப்பியவர்களின் கண்ணியம் மற்றும் தனியுரிமையைப் பாதுகாத்தல் ஆகியவற்றை இது பரிந்துரைக்கிறது.
  • அனைவரையும் உள்ளடக்கிய நீதித்துறை மொழிக்கான ‘பாலியல் நோக்குநிலை, பாலின அடையாளம், வெளிப்பாடு மற்றும் பாலினப் பண்புகள்’ (SOGIESC) கட்டமைப்பையும் இது ஊக்குவிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்