TNPSC Thervupettagam

உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகள்

May 30 , 2026 13 hrs 0 min 25 0
  • உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க நான்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் மற்றும் ஒரு மூத்த பெண் வழக்கறிஞரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் குழு பரிந்துரை செய்துள்ளது.
  • உச்ச நீதிமன்றத்தில் பயிற்சி பெறும் மூத்த வழக்கறிஞர் வி. மோகனாவின் பெயரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நீதிபதிகளின் குழு பரிந்துரைத்துள்ளது.
  • தற்போது, நீதிபதி பி.வி. நாகரத்னா மட்டுமே உச்ச நீதிமன்றத்தில் உள்ள ஒரே பெண் நீதிபதியாவார் என்பதோடு, மேலும் அவர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார்.
  • கடைசியாக ஒரு பெண் நீதிபதி 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்டார் என்ற நிலையில், இந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நியமிக்கப்படும் முதல் பெண் நீதிபதியாக வி. மோகனா இருப்பார்.
  • இந்தியத் தலைமை நீதிபதி (CJI) உட்பட உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அனுமதிக்கப் பட்ட எண்ணிக்கை 32-லிருந்து 38 ஆக அதிகரிக்கப்பட்டதையடுத்து இப் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
  • ஷீல் நாகு, ஸ்ரீ சந்திரசேகர், சஞ்சீவ் சச்தேவா மற்றும் அருண் பள்ளி ஆகிய நான்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்