2025 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதி முதல், இனி அனைத்து புதிய வழக்குகளும் விசாரணைக்காக தானாகவே பட்டியலிடப்படும்.
வழக்கு தொடுப்பவர்கள் தங்கள் வழக்குகளைப் பட்டியலிடுவதற்கு என்று குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.
தனிநபர் சுதந்திரம் சம்பந்தப்பட்ட அவசர வழக்குகள் சரிபார்ப்புக்குப் பிறகு 2 வேலை நாட்களுக்குள் விசாரிக்கப்படும்.
பிணை/ஜாமீன், முன்ஜாமீன், மரண தண்டனை, ஆட்கொணர்வு நீதிப்பேராணை, வெளியேற்றம் /உடைமை பறிமுதல் மற்றும் கட்டிட இடிப்பு வழக்குகளுக்கு என்று காலை 10:00 மணி முதல் காலை 10:30 மணி வரை அவசர கோரிக்கைகளை செய்யலாம்.
மூத்த வழக்கறிஞர்கள் வாய்மொழியான குறிப்பிடல்களை மேற்கொள்ள முடியாது; அவசர காலங்களில் இளநிலை/ஜூனியர் வழக்கறிஞர்கள் அவ்வாறு செய்யலாம்.
பழைய வழக்குகளுக்கான ஒத்தி வைப்புக் கடிதங்கள் பொதுவாக நிலுவையில் உள்ள வழக்குகளைக் குறைக்க அனுமதிக்கப் படுவதில்லை.