1950 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து, உச்ச நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டச் சாதியினர் அல்லது பட்டியலிடப்பட்டப் பழங்குடியினரைச் சேர்ந்த ஏழு நீதிபதிகள் மட்டுமே இருந்தனர்.
2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பல்வேறு உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் பதவிக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்தவர்களில் 3.6% பேர் மட்டுமே பட்டியலிடப்பட்ட சாதியினரைச் சேர்ந்தவர்கள் மற்றும் அதற்கும் குறைவானவர்களே பட்டியலிடப்பட்ட பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 221 பெயர்களை நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலீஜியம்) பரிந்துரைத்தது.
இவர்களில் 8 பேர் பட்டியலிடப்பட்ட சாதியினரைச் சேர்ந்தவர்கள் மற்றும் 7 பேர் மட்டுமே பட்டியலிடப்பட்ட பழங்குடியினரைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
மேலும், இந்த 221 பெயர்களில் சிலவற்றை இன்னும் மத்திய அரசு நியமிக்கவில்லை.
இதரப் பிற்படுத்தப்பட்ட சாதியினர் வகுப்பினைச் சேர்ந்த சுமார் 14.5% அல்லது 32 நபர்கள் நியமிக்கப் பட்டனர் அதில் பெண்கள் 15.3% அல்லது 34 நபர்களாக இருந்தனர்.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தேர்வுக் குழுவினால் பெயரிடப்பட்ட மொத்தம் சுமார் 124 பேர் அதாவது பரிந்துரைக்கப்பட்டவர்களில் சுமார் 56% பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், ஆனால் பெண்கள் அல்லது சிறுபான்மையினர் யாரும் இதில் இடம் பெற வில்லை.
இந்தப் பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட நீதிபதிகளில் சுமார் 6% பேர் ஏற்கனவே உள்ள நீதிபதிகளுடன் தொடர்புடையவர்கள்.
உச்ச நீதிமன்றம் இந்தச் செய்தி அறிக்கையினை வெளியிடுவதற்கான காரணத்தைக் கூறவில்லை ஆனால் அது "பொதுமக்களின் அறிவு மற்றும் ஒரு விழிப்புணர்வுக்காக" வெளியிடப் பட்டது என்று கூறியது.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிகளுக்கான பாதிக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் (52.9%) வழக்கறிஞர் சபையிடமிருந்து வந்ததாகவும், வழக்கறிஞர்களாக மாறிய நீதிபதிகள் பெரும்பான்மையாக இருப்பதையும் உச்ச நீதிமன்றத்தின் தரவு காட்டுகிறது.
மாறாக, நீதிபதிகள் தேர்வுக் குழுவானது, உயர் நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து ஏற்கனவே பணியாற்றும் நீதிபதிகளின் பெயர்களையும் பரிந்துரைக்கலாம்.
உச்ச நீதிமன்றத்தில் எந்தவொரு அடையாளத்தின் அடிப்படையிலான இட ஒதுக்கீடும் இல்லை.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தேர்வுக் குழுவானது, உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு ஒரு தகுதியின் அடிப்படையில் மட்டுமே பரிந்துரைகளை செய்கிறதே தவிர, ஒரு நபரின் பாலினம் அல்லது சாதி அடையாளம் அதில் எந்தப் பங்கையும் வகிக்கக் கூடாது.
ஒவ்வொரு மாநிலத்திலும் இட ஒதுக்கீடு காரணமாக மாவட்ட நீதித்துறை நியமனம் வேறுபட்டு உள்ளது ஆனால் உயர் நீதிமன்றத்தில் அவற்றின் பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்கும் அளவுக்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் பெரும்பாலும் அல்லது நீண்ட காலத்திற்குப் பதவி உயர்த்தப்படுவதில்லை.
நீதித் துறையின் இத்தரவுகள் உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் சுமார் 1,122 நீதிபதி பதவிகள் இருந்ததைக் காட்டியது.
உச்ச நீதிமன்றமானது 2022 ஆம் ஆண்டு நவம்பர் 09 முதல் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 10 வரை மற்றும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 11 முதல் 05, மே 2025 வரை என இரண்டு பகுதிகளாகத் தரவை வழங்கியது என்பதோடு இது இந்தியாவின் கடைசி இரண்டு தலைமை நீதிபதிகளின் பதவிக் காலத்தைக் குறிக்கிறது.
இந்த இரண்டு தலைமை நீதிபதிகளும் முன்னாள் நீதித்துறை உறுப்பினர்களுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
சந்திரசூட், 1978 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 1985 ஆம் ஆண்டு வரை தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி யஷ்வந்த் சந்திரசூட்டின் மகன் ஆவார்.