TNPSC Thervupettagam

உடல் பருமனுக்கான GLP-1 மருந்துகள்

December 10 , 2025 15 hrs 0 min 14 0
  • கர்ப்பிணிப் பெண்களைத் தவிர்த்து, வயது வந்தவர்களில் உடல் பருமனுக்கான நீண்ட கால சிகிச்சைக்கான GLP-1 சிகிச்சைகளை அங்கீகரிக்கும் உலகளாவிய வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டது.
  • GLP-1 சிகிச்சைகள் உணவு மற்றும் உடற்பயிற்சி சார்ந்த நடவடிக்கைகளுடன் சேர்த்து மேற்கொள்ளப்பட வேண்டும்; உடல் பருமனை நிவர்த்தி செய்ய மருந்து மட்டும் போதாது.
  • மருந்து நிறுத்தப்பட்ட பிறகு செயல்திறன், பாதுகாப்பு மற்றும் விளைவுகள் குறித்த வரையறுக்கப்பட்ட நீண்டகாலத் தரவு மற்றும் அதிக செலவுகள் காரணமாக WHO ஒரு நிபந்தனை சார் பரிந்துரையை வெளியிட்டது.
  • உடல் பருமன் ஆனது, முக்கிய தொற்றா நோய்கள் மற்றும் உலகளாவியப் பொருளாதாரச் செலவினங்களுக்குப் பங்களிக்கிறது என்பதோடு இது 2030 ஆம் ஆண்டிற்குள் ஆண்டுதோறும் 3 டிரில்லியன் மதிப்பினை எட்டும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
  • உலகளவில் மலிவு விலையில் பொதுப் பெயர் மருந்துகள், காப்பீட்டு வழங்கீடு மற்றும் ஒருங்கிணைந்த உடல் பருமன் மேலாண்மை நடவடிக்கை அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்து, இந்த மருந்துகளுக்கான சமமான அணுகலை WHO வலியுறுத்தியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்