ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்ட அமைப்பு மற்றும் மிதமான வறண்ட வெப்ப மண்டலப் பகுதிகளுக்கான சர்வதேசப் பயிர் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து உணவுப் பாதுகாப்பு குறித்த ஒப்பந்தம் ஒன்றினை மேற்கொண்டுள்ளன.
இந்தியா முழுவதிலும் உணவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரம் போன்றவற்றை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி மீதான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
ICRISAT என்ற அமைப்பின் தலைமையிடமானது ஹைதராபாத்தின் பட்டன்சேரு என்னுமிடத்தில் அமைந்துள்ளது.
1961 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட உலக உணவுத் திட்ட அமைப்பின் தலைமையிடமானது ரோமில் அமைந்துள்ளது.