TNPSC Thervupettagam

உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் மாற்றங்கள்

July 11 , 2026 3 days 32 0
  • தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (NFSA), 2013-இல் மத்திய அரசு முன்மொழிந்துள்ள திருத்தங்களுக்கு தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
  • இந்த வரைவுத் திருத்தமானது, அந்தியோதயா அன்ன யோஜனா (AAY) பயனாளிகளுக்கு ஒரு நபருக்கு மாதத்திற்கு 7 கிலோ உணவு தானியங்களை வழங்குவதாகவும், ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 35 கிலோ என நிர்ணயிப்பதாகவும் முன்மொழிகிறது.
  • சிறிய மற்றும் பெரிய குடும்பங்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வுகளைக் குறைத்து, நபர் ஒருவருக்கான ஒதுக்கீட்டை நியாயமான முறையில் உறுதி செய்வதே இந்த மாற்றத்தின் நோக்கம் என்று மத்திய அரசு கூறுகிறது.
  • இந்தத் திருத்தமானது, சிறிய அளவிலான குடும்பங்களுக்கான உணவு தானிய ஒதுக்கீட்டைக் குறைக்கும் என்றும், குடும்பச் செலவுகளை அதிகரிக்கும் என்றும் தமிழ்நாடு மற்றும் கேரளா வாதிடுகின்றன.
  • உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய முறையின் கீழ், தனது மாதாந்திர AAY ஒதுக்கீடு 65,261 டன்னிலிருந்து 42,040 டன்னாகக் குறையும் என்று தமிழ்நாடு மதிப்பிட்டுள்ளது.
  • AAY பயனாளிகளுக்கு ஒரு குடும்பத்திற்குத் தற்போதுள்ள 35 கிலோ உரிமையையே தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என இரு மாநிலங்களும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்