TNPSC Thervupettagam

உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பற்றிய ஆப்பிரிக்கா பிராந்திய கண்ணோட்ட அறிக்கை

December 17 , 2023 573 days 379 0
  • ஆப்பிரிக்காவில் உள்ள சுமார் 282 மில்லியன் மக்கள், மக்கள்தொகையில் 20% சதவீதத்தினர் 2022 ஆம் ஆண்டில் ஊட்டச்சத்து குறைபாட்டினை எதிர்கொண்டு உள்ளனர்.
  • கிழக்கு ஆப்பிரிக்கா நாடானது, 134.6 மில்லியன் ஊட்டச்சத்து குறைபாடுள்ள நபர்களுடன் முதலிடத்தில் உள்ள நிலையில் இதைத் தொடர்ந்து மேற்கு ஆப்பிரிக்கா 62.8 மில்லியன், மத்திய ஆப்பிரிக்கா 57 மில்லியன், வடக்கு ஆப்பிரிக்கா 19.5 மில்லியன், மற்றும் தென் ஆப்பிரிக்கா 7.6 மில்லியன் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
  • ஆப்பிரிக்காவில், 342 மில்லியன் மிகக் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலையை எதிர்கொள்ளும் நபர்களுடன், சுமார் 868 மில்லியன் மக்கள் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலையில் உள்ளனர்.
  • ஆப்பிரிக்காவின் மக்கள் தொகையில் 77.5% பேர், சுமார் ஒரு பில்லியன் நபர்கள் 2021 ஆம் ஆண்டில் ஆரோக்கியமான உணவை வாங்க இயலவில்லை.
  • இது 42% என்ற உலகளாவிய விகிதத்துடன் அதிக அளவில் முரண்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்