வியாபாரத்தை எளிதாக்கும் முயற்சியில், உணவுத் தரத்தினைக் கண்காணிக்கும் அமைப்பான உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India - FSSAI) ஆனது உணவுப் பாதுகாப்பு மித்ரா என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்தத் திட்டமானது உணவுப் பாதுகாப்புச் சட்டங்களுக்கு இணங்க சிறு மற்றும் நடுத்தர உணவு வணிகங்களை ஆதரிக்கும்.
உணவுப் பாதுகாப்பு மித்ரா என்பது FSSAI ஆல் சான்றளிக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட தொழில்முறை திட்டமாகும். இது FSS சட்டம், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் தொடர்பான இணக்கங்களுக்கு உதவுகிறது.
அந்தந்த பணி நோக்கம் மற்றும் பொறுப்புகளைப் பொறுத்து அவை பின்வருமாறு வகைப்படுத்தப் படுகின்றன- டிஜிட்டல் மித்ரா, பயிற்சியாளர் மித்ரா அல்லது சுகாதார மித்ரா.