எளிதாக தொழில் செய்வதை மேம்படுத்துவதற்காக உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிலைகள் (உணவு வணிகங்களின் உரிமம் மற்றும் பதிவு) விதிமுறைகள், 2011-ஐ சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) திருத்தியுள்ளது.
உணவுத் தொழில் நடத்துபவர்களுக்கான விதிமுறைகளை எளிதாக்கும் வகையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம், 2006 இன் கீழ் இந்தத் திருத்தம் வெளியிடப் பட்டுள்ளது.
'முதலில் வந்தது முதலில் செல்லும்' (FIFO) மற்றும் 'முதலில் காலாவதியாவது முதலில் செல்லும்' (FEFO) ஆகிய இருப்பு சுழற்சி மற்றும் பதிவுப் பராமரிப்புத் தேவைகள் இப்போது உணவுத் தயாரிப்பு வணிகங்களுக்கு மட்டுமே கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் அது சார்ந்த தொழில் நடத்துபவர்கள் போன்ற தயாரிப்பு அல்லாத உணவு வணிகங்களுக்கு இந்தத் தேவைகளில் இருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
இந்தச் சீர்திருத்தம், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர உணவு நிறுவனங்களுக்கான இணக்கச் சுமையைக் குறைக்கிற அதே வேளையில் உற்பத்தியாளர்களுக்கான முக்கிய உணவுப் பாதுகாப்பு மற்றும் கண்டறியும் தரநிலைகளைப் பராமரிக்கிறது.