TNPSC Thervupettagam

உணவு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி 2024-25

November 25 , 2025 2 days 47 0
  • 2023-24 ஆம் ஆண்டில் 332.30 மில்லியன் டன்களாக இருந்த இந்தியாவின் மொத்த உணவு தானிய உற்பத்தி ஆனது, 2024-25 ஆம் ஆண்டில் சாதனை அளவாக 357.73 மில்லியன் டன்களை எட்டியது.
  • 2015-16 ஆம் ஆண்டில் 251.54 மில்லியன் டன்னாக இருந்த மொத்த உணவு தானிய உற்பத்தியானது கடந்த 10 ஆண்டுகளில் 106 மில்லியன் டன் அதிகரித்துள்ளது.
  • அரிசி உற்பத்தியானது 150.18 மில்லியன் டன்னாகவும், கோதுமை உற்பத்தி 117.95 மில்லியன் டன்னாகவும் உயர்ந்துள்ளது இரண்டும் அதிகபட்ச அளவுகளாகும்.
  • மொத்தப் பருப்பு வகைகள் உற்பத்தியானது, 25.68 மில்லியன் டன்னாகவும், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி 42.99 மில்லியன் டன்னாகவும், சோயா அவரை 15.27 மில்லியன் டன்னாகவும், நிலக்கடலை 11.94 மில்லியன் டன்னாகவும் இருந்தது.
  • மக்காச்சோள உற்பத்தி 43.41 மில்லியன் டன்னாகவும், சிறு தானிய (‘ஸ்ரீ அன்னம்’) உற்பத்தி 18.59 மில்லியன் டன்னாகவும் இருந்தது.
  • கரும்பு உற்பத்தி 454.61 மில்லியன் டன்னாகவும், பருத்தி உற்பத்தி 29.72 மில்லியன் பேல்களாகவும், சணல்/மெஸ்டா உற்பத்தி 8.80 மில்லியன் பேல்களாகவும் உயர்ந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்