மத்திய வேளாண் அமைச்சகமானது, 2023-24 ஆம் ஆண்டில் 3,320 லட்சம் டன்கள் (332 மில்லியன் டன்கள்) உணவு தானியங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
சமீபத்திய மதிப்பீட்டின்படி, முந்தைய ஆண்டில் 3,235 லட்சம் டன் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் 278.1 லட்சம் டன்னாக நிர்ணயிக்கப்பட்ட பருப்பு உற்பத்திக்கான ஒரு இலக்கானது, 2023-24 ஆம் ஆண்டில் 292.5 லட்சம் டன்னாக நிர்ணயம் செய்யப் பட்டு உள்ளது.
2023-24 ஆம் ஆண்டில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி 400 லட்சம் டன்னிலிருந்து 440 லட்சம் டன்னாக உயர்த்தப்படும்.
2022-23 ஆம் ஆண்டில் 159.1 லட்சம் டன்னாக இருந்த சிறு தானியங்களின் உற்பத்தி இலக்கானது 2023-24 ஆம் ஆண்டில் 170 லட்சம் டன்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.