உணவு தானிய சேமிப்பிற்கான திறன்மிகு கிடங்கு அமைப்பு
June 24 , 2026 73 days 185 0
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் பொருட்களின் இணையம் (IoT) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பொதுத்துறை கிடங்குகளை நவீனமயமாக்குவதற்காக, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் உணவு தானிய சேமிப்பிற்கான 'திறன்மிகு கிடங்கு அமைப்பை' அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுத்துறை உணவு தானியக் கிடங்குகளில் AI மற்றும் IoT சார்ந்த தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும் உலகின் மிகப்பெரிய அமைப்பு இதுவாகும்.
இது நுழைவாயில் தானியக்கமாக்கலுக்கான FASTag மற்றும் தானியங்கி எண் பலகை அறிதல் (ANPR) தொழில்நுட்பம் மற்றும் அணுகல் கட்டுப்பாட்டிற்கான புவி-குறியிடப் பட்ட திறன்மிகு அமைப்புகளை உள்ளடக்கியது.
இது இந்தியாவில் மத்திய சேமிப்பு கிடங்கு கழகத்தின் (CWC) 215 கிடங்குகளிலும், இந்திய உணவுக் கழகத்தின் (FCI) 150 கிடங்குகளிலும் செயல்படுத்தப்படுகிறது.
இது செயல்திறனை மேம்படுத்துதல், வாகனங்களின் சுழற்சி நேரத்தைக் குறைத்தல், கண்காணிப்பை மேம்படுத்துதல் மற்றும் கிடங்குகளின் நிலை குறித்த நிகழ்நேரப் பார்வையை வழங்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.