TNPSC Thervupettagam

உணவு நெருக்கடிகள் குறித்த உலகளாவிய அறிக்கை 2025

May 21 , 2025 45 days 116 0
  • "2025 ஆம் ஆண்டு உணவு நெருக்கடிகள் குறித்த உலகளாவிய அறிக்கையானது" (GRFC) உணவுப் பாதுகாப்பு தகவல் வலையமைப்பு (FSIN) என்ற அமைப்பினால் வெளியிடப் பட்டது.
  • உலகெங்கிலும் உள்ள சுமார் 295 மில்லியன் மக்கள் தற்போது கடுமையான பட்டினி நிலையை எதிர்கொண்டு வருகின்றனர்.
  • இது 2020 ஆம் ஆண்டில் இருந்த நிலையை விட இரண்டு மடங்கு அதிகமாகும், மேலும் இது தொடர்ச்சியான ஆறாவது வருடாந்திர அதிகரிப்பைக் குறிக்கிறது.
  • மோதல்களால் ஏற்படும் நெருக்கடிகள் நிலவும் நைஜீரியா, சூடான் மற்றும் மியான்மர் போன்ற 19 நாடுகளில் மோசமடைந்து வரும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலவுகிறது.
  • ஊட்டச்சத்து நெருக்கடிகள் உள்ள 26 நாடுகள் / பிராந்தியங்களில், 6–59 மாத வயது உடைய சுமார் 37 .7 மில்லியன் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப் பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்