TNPSC Thervupettagam

உணவு நெருக்கடிகள் மீதான உலகளாவிய அறிக்கை - 2021

May 8 , 2021 1557 days 692 0
  • உணவு நெருக்கடிகள் மீதான உலகளாவிய அமைப்பானது (Global Network Against Food Crises – GNAFC) சமீபத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான உணவு நெருக்கடிகள் மீதான உலகளாவிய அறிக்கையினை வெளியிட்டது.
  • GNATC என்பது ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் இதர அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகியவற்றால் அமைக்கப்பட்ட ஒரு சர்வதேசக் கூட்டணியாகும்.  
  • 2020 ஆம் ஆண்டில் 40 மில்லியன் மக்கள் பசியில் ஆழ்த்தப்பட்டதற்கான முக்கியக் காரணம் பொருளாதார நெருக்கடி தான் என்று இந்த அறிக்கை கூறுகிறது.
  • 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 24 மில்லியன் உயர்ந்துள்ளது.

குறிப்பு

  • உணவுப் பற்றாக்குறையினால் மோசமாக பாதிக்கப்பட்டது ஆப்பிரிக்கக் கண்டம் ஆகும்.
  • உலகளாவிய உணவுப் பற்றாக்குறைகளில் 63%க்கும் மேற்பட்டவை ஆப்பிரிக்காவில் பதிவாகியுள்ளது.
  • பருவநிலைப் பிரச்சினைகளால் ஜிம்பாப்வே மற்றும் ஹைத்தி ஆகிய நாடுகளில் 15 மில்லியன் மக்களின் உணவுப் பாதுகாப்பானது பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்