TNPSC Thervupettagam

உணவு மற்றும் வேளாண்மை நிலை குறித்த அறிக்கை 2025

November 12 , 2025 5 days 27 0
  • உணவு மற்றும் வேளாண்மை நிலை (SOFA) குறித்த அறிக்கை 2025 ஆனது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பினால் (FAO) வெளியிடப் பட்டது.
  • நிலத் தரமிழப்பு ஆனது, உலகளவில் 1.7 பில்லியன் மக்களைப் பாதிப்பதோடு, உணவுப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை அச்சுறுத்துகிறது என்று இந்த அறிக்கை கூறியது.
  • உலகளாவியக் காடழிப்புக்கு, சுமார் 90% காடுகளின் இழப்புக்குப் பங்களித்த வேளாண்மையின் விரிவாக்கம் முக்கிய காரணமாக உள்ளது.
  • நிலத் தரமிழப்பு காரணமாக ஒவ்வோர் ஆண்டும் 3.6 மில்லியன் ஹெக்டேர் (mha) பயிர் நிலங்கள் கைவிடப் படுவதாக அறிக்கை குறிப்பிட்டது.
  • கிழக்கு மற்றும் தெற்காசியாவில், கடுமையான நிலத் தரமிழப்பு மற்றும் அடர்த்தியான மக்கள்தொகை நெருக்கடியை எதிர்கொள்ளும் மிகப்பெரிய மக்கள் தொகை உள்ளது.
  • மனிதனால் தூண்டப்பட்ட நிலத் தரமிழப்புடன் தொடர்புடைய மிக உயர்ந்தப் பயிர் மகசூல் இடைவெளிகளில் சில இந்தியாவில் பதிவாகியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்