உணவு வீணாக்கக் கழிவு குறியீட்டு அறிக்கை – 2021
March 8 , 2021
1612 days
760
- இது உலகளாவிய அளவில் உணவு வீணாக்கக் கழிவுகளின் ஒரு புதிய மதிப்பீட்டை உருவாக்கும் மிக விரிவான உணவு வீணாக்கக் கழிவு மீதான ஒரு தரவுச் சேகரிப்பு ஆகும்.
- இந்தக் குறியீட்டு அறிக்கையானது அதன் பங்காளர் அமைப்பான WRAP என்ற அமைப்புடன் இணைந்து ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தினால் வெளியிடப் பட்டது.
- 2019 ஆம் ஆண்டில் உலகளவில் 931 மில்லியன் டன் உணவு வீணடிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் அறிக்கை காட்டுகின்றது.
- இந்தியாவில் வீடுகள் தோறும் உருவாகும் உணவு வீணடித்தல் அளவு ஆனது ஆண்டுக்கு 50 கிலோ ஆக உள்ளது. இது ஆண்டுக்கு 68.7 மில்லியன் டன்களுக்குச் சமமாகும்.
மற்ற நாடுகளில்
- அமெரிக்காவில் வீடுகள் தோறும் உருவாகும் உணவு வீணடித்தல் அளவு ஆனது ஆண்டுக்கு 59 கிலோ ஆகும். இது ஆண்டுக்கு 19,359,951 டன்களுக்குச் சமமாகும்.
- சீனாவில் உற்பத்தியாகும் உணவு வீணடித்தல் அளவானது ஆண்டுக்கு 64 கிலோ ஆகும். இது ஒரு வருடத்தில் 91,646,213 டன்கள் ஆகும்.
- ஆஸ்திரியா ஆனது ஒரு ஆண்டுக்கு 39 கிலோ / தனிநபர் என்ற அளவில் மிகக் குறைந்த அளவிலான உணவு வீணடித்தல் கழிவுகளை உற்பத்தி செய்கின்றது.
- நைஜீரியா ஆண்டுக்கு 189 கிலோ/தனிநபர் அளவிலான உணவு வீணடித்தல் கழிவுகளை உற்பத்தி செய்கின்றது.

Post Views:
760