TNPSC Thervupettagam

உண்மையறியும் மற்றும் நல்லிணக்க ஆணையம்

December 15 , 2023 604 days 337 0
  • நீதிபதி சஞ்சய் கிஷன் கௌல் "நடுநிலையான உண்மையறியும் மற்றும் நல்லிணக்க ஆணையத்தினை" அமைப்பதற்குப் பரிந்துரைத்துள்ளார்.
  • இது ‘உண்மை மற்றும் நீதி ஆணையம்’ அல்லது ‘உண்மை ஆணையம்’ என்றும் அழைக்கப் படுகிறது.
  • இது ஒரு அரசு அல்லது சில சமயங்களில் அரசு சார்பற்றத் தரப்பினர்கள் அல்லது சில போராளிகள் செய்த தவறுகளை ஒப்புக் கொள்வது மட்டுமல்லாமல் அது குறித்து வெளிப்படுத்துவதற்குமான ஒரு அதிகாரப்பூர்வ நெறிமுறையாகும் என்பதால் கடந்த கால மோதல்கள் தீர்க்கப்பட்டு அதற்கான தீர்வு காணப்படும்.
  • 1980 ஆம் ஆண்டுகளில் இருந்து ஜம்மு மற்றும் காஷ்மீரில் அரசு மற்றும் அரசு சாரா தரப்பினர்களால் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்களை விசாரித்து அது குறித்து அறிக்கை அளிப்பதையும் நல்லிணக்கத்திற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கச் செய்வதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உகாண்டா (1974) மற்றும் கென்யா (2009) ஆகிய முந்தைய உண்மை ஆணையங்கள் நன்கு அறியப்பட்டவையாகும்.
  • தென்னாப்பிரிக்காவில், அதிபர் நெல்சன் மண்டேலாவால் அமைக்கப்பட்ட முதலாவது நிறவெறிக்குப் பிந்தைய அரசாங்கம் ஆனது 1995 ஆம் ஆண்டில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தினை நிறுவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்