மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME - Micro Small and Medium Enterprises) துறை அமைச்சகமானது இதனை வெளியிட்டுள்ளது.
இது ஜூலை 01 ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் MSMEகளின் வகைப்பாடு மற்றும் பதிவிற்கான ஓர் ஒருங்கிணைந்த அறிவிக்கையாகும்.
MSME ஆனது உதயம் என்றும் அறியப்படும். இந்தப் பதிவு நடைமுறையானது உதயம் பதிவுகள் என்றறியப்படும்.
MSME வகைப்பாட்டிற்கான அடிப்படைத் தகுதி நிலை ஆலையில் செய்யப்படும் முதலீடு, இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் மற்றும் விற்றுமுதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும்.