இந்திய சிறுதொழில் அபிவிருத்தி வங்கியானது (SIDBI - Small Industries Development Bank of India) தேசிய அளவிலான தொழில் முனைவோர் விழிப்புணர்வுப் பிரச்சாரமான “உதயம் அபிலாஷாலா”வை தொடங்கியுள்ளது.
இது 28 மாநிலங்களிலிருந்து நிதி ஆயோக்கால் அடையாளம் காணப்பட்ட 115 லட்சிய மாவட்டங்களில் தொடங்கப்பட்டது.
இந்த பிரச்சாரத்தைச் செயல்படுத்துவதற்காக, SIDBI ஆனது சிறப்பு நோக்க வாகனமான (SPV - Special Purpose Vehicle) CSC இ-கவர்னன்ஸ் சர்வீசஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. CSC SPV-யானது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் பொது சேவை மையங்களின் (Commone Service Centres - CSC) மூலம் இணைந்துள்ள ஒரு அமைப்பாகும்.