உதவித்தொகை பெறுவதற்கான வருடாந்திர வருமான வரம்பு உயர்வு
June 6 , 2019 2173 days 738 0
அஸ்ஸாம் மாநில அரசானது மாணவர்கள் தங்கள் முதுகலைப் பட்டப்படிப்பு வரையிலான படிப்பிற்கு உதவித் தொகை பெறுவதற்காக அவர்களின் பெற்றோரின் வருடாந்திர வருமான உச்ச வரம்பை 1 லட்சத்திலிருந்து 2 லட்சமாக உயர்த்தியுள்ளது.
இந்தத் திட்டமானது அஸ்ஸாமின் தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்குப் பொருந்தாது.
மத்திய மற்றும் மாநில அரசில் பணிபுரியும் பெற்றோர்களின் குழந்தைகளும் இத்திட்டத்தில் பயனடைய தகுதியற்றவர்கள் ஆவர்.