TNPSC Thervupettagam

உத்கல் திவாஸ் 2026 - ஏப்ரல் 01

April 3 , 2026 14 hrs 0 min 34 0
  • ஒடிசா மாநிலம் உருவானதைக் குறிக்கும் வகையில் உத்கல் திவாஸ் எனும் ஒடிசா நிறுவன தினம் கொண்டாடப்படுகிறது.
  • பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த பல்வேறு மாகாணங்களில் இருந்து ஒடியா மொழி பேசும் பகுதிகளைப் பிரித்து, 1936 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று ஒடிசா உருவாக்கப் பட்டது.
  • ஒடியா மொழி மற்றும் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாப்பதற்காக, இந்தியாவில் மொழியியல் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மாநிலம் இதுவாகும்.
  • தனி மாநிலத்திற்கான இந்த இயக்கத்தை மதுசூதன் தாஸ் மற்றும் கோபாபந்து தாஸ் போன்ற தலைவர்கள் முன்னெடுத்தனர்.
  • தொடக்கத்தில், இம்மாநிலத்தில் கட்டாக், பூரி, பாலேஸ்வர், சம்பல்பூர், கோராபுட் மற்றும் கஞ்சம் ஆகிய ஆறு மாவட்டங்கள் மட்டுமே இருந்தன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்