உத்தரகாண்ட் மாநில அரசானது அதன் முதல் புவிவெப்ப ஆற்றல் கொள்கைக்கு தனது ஒப்புதல் அளித்துள்ளது.
நிலையான ஆற்றல், மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் இலக்குகளுக்கு இயற்கை சார்ந்த புவிவெப்ப நீரூற்றுகளின் ஆற்றலைப் பயன்படுத்துவதை இது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் கொள்கையானது இமயமலைப் பகுதியில் அடையாளம் காணப்பட்ட 40 புவி வெப்ப நீரூற்றுகளை தூய்மையான மின்சாரம், வெப்பமாக்கல் மற்றும் இதர பிறப் பயன்பாடுகளுக்குப் பயன்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளது.
இது ஐஸ்லாந்தின் வர்கிஸ் நிறுவனத்துடன் இணைந்து உயரமான இடங்களில் உள்ள புவி வெப்ப வளங்களை ஆராய்கிறது.
உத்தரகாண்ட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை (UREDA) மற்றும் உத்தரகாண்ட் ஜல் வித்யுத் நிகாம் லிமிடெட் (UJVNL) ஆகியவற்றால் இதன் அமலாக்கம் நிர்வகிக்கப் படுகிறது.