உத்தரப் பிரதேசம் – டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் முதலிடம்
March 31 , 2021 1529 days 683 0
உத்தரப் பிரதேசம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின் எண்ணிக்கையில் முதலிடம் பிடித்து ஒரு சாதனையைப் படைத்துள்ளது.
இத்தகையப் பணப் பரிவர்த்தனைகள் ஒருங்கிணைக்கப்பட்ட பணவழங்கீட்டு இடைமுகச் செயலி (UPI - Unified Payment Gateway) இணையதள வங்கி, பற்று அட்டை போன்றவற்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் இந்திய ரிசர்வ் வங்கி, உத்தரப் பிரதேசத்தில் இரு மாவட்டங்களை ‘டிஜிட்டல் மாவட்டங்களாக’ அறிவித்துள்ளது.
அவை சித்தார்த்தா நகர் மற்றும் பெரோசாபாத் ஆகியனவாகும்.