உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில் இந்துக்களைக் கிறிஸ்தவ மதத்திற்கு "பெருமளவில் மதமாற்றம்" செய்ததாகக் கூறி பதிவு செய்யப்பட பல முதல் தகவல் அறிக்கைகளை (FIR) உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
2021 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மாநிலத்தின் சட்ட விரோத மதமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் இந்த முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப் பட்டன.
உத்தரப் பிரதேசச் சட்டத்தின்படி, அப்போதைய நிலையின்படி, பாதிக்கப்பட்டவர்கள் (அல்லது அவர்களது உறவினர்கள்) மட்டுமே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருக்க முடியும்.
குற்றவியல் சட்டத்தினை எந்தத் தவறும் இழைக்காத மக்களை துன்புறுத்துவதற்கான ஒரு கருவியாக மாற்ற அனுமதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.