பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, உந்துவிசை ஏவுகணை பாதுகாப்பு இடைமறிப்பு ஏவுகணையான AD-1 என்ற ஏவுகணையின் இரண்டாம் கட்டச் சோதனையினை வெற்றிகரமாக மேற்கொண்டது.
AD-1 என்பது தாழ்மட்ட வெளிப்புற மற்றும் உட்புற-வளிமண்டல பகுதிகளில் மேற் கொள்ளப்படும் நீண்ட தூர வரம்புடைய உந்துவிசை ஏவுகணைகள் மற்றும் விமானங்களின் தாக்குதலின் இடைமறிப்பு பாதுகாப்பிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு நீண்ட தூர வரம்புடைய இடைமறிப்பு ஏவுகணை ஆகும்.
இது இரண்டு நிலை திட ரக எரிபொருள் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது.
இது உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மேம்பட்ட கட்டுப்பாட்டு அமைப்பு, வழி செலுத்தல் மற்றும் வழிகாட்டுதல் செயல்பாட்டு நிரல்கள் ஆகியவற்றைக் கொண்டு உள்ளது.