காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள உபெம்பா தேசிய பூங்காவின் தலைமையகத்தின் மீது ஆயுதமேந்திய தாக்குதல் நடத்தப்பட்டது
1939 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பூங்கா, ஆப்பிரிக்காவின் பழமையான தேசியப் பூங்காக்களில் ஒன்றாகும்.
இது காங்கோ ஜனநாயகக் குடியரசின் தென்கிழக்குப் பகுதியில் லுவாலாபா, ஹாட்-கடங்கா மற்றும் ஹாட்-லோமாமி ஆகிய மாகாணங்களில் பரவியுள்ளது.
சுமார் 12,752 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இப்பூங்காவில், உபெம்பா ஏரி உட்பட 80க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன என்பதோடு இது மிக செழுமையான பல்லுயிர்ச் சூழலைத் தாங்கி நிற்கிறது.