நேரடியாகப் பதிவு செய்யப்பட 213 எண்ணிக்கையுடன், 2025 ஆம் ஆண்டில் சுந்தரவன உயிர்க்கோள காப்பகத்தில் (SBR) உள்ள உப்பு நீர் முதலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மதிப்பிடப்பட்ட முதலைகளின் எண்ணிக்கை 220 முதல் 242 வரை உள்ளது என்ற நிலையில் இது 2024 ஆம் ஆண்டில் இருந்த 204 எண்ணிக்கையிலிருந்து 234 ஆக அதிகரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் இவற்றின் நேரடிப் பதிவு விகிதம் ஒரு கிலோமீட்டருக்கு தோராயமாக 0.18 முதலைகள் அல்லது ஆய்வு செய்யப்பட்ட 5.5 கி.மீ. கழிமுகத்திற்கு ஒரு முதலை என்ற வீதத்தில் இருந்தது.
இந்தக் கணக்கெடுப்பு ஆனது SBR பகுதியில் உள்ள குறிப்பிடத்தக்க கழிமுகப் பகுதியின் நீளத்தில் 64% ஆக உள்ள 1,168 கி.மீ கழிமுகப் பகுதியில் மேற் கொள்ளப் பட்டது.
உப்பு நீர் முதலைகள் 180 மீட்டருக்கும் குறைவான அதிக ஓதப் பரவல் அகலம் கொண்ட கழிமுகம் மற்றும் ஆறுகளில் வாழ்கின்றன மற்றும் அதிக அளவிலான நீர் உப்புத் தன்மை தாங்கும் திறனைக் கொண்டுள்ளன.
மேற்கு வங்காள அரசு ஆனது 2022 ஆம் ஆண்டு வரை 577 முதலைகளை காட்டுக்குள் விட்டு, 1976 ஆம் ஆண்டு முதல் பகபத்பூர் முதலை வளங்காப்பு திட்டத்தின் மூலம் முதலைகளைப் பாதுகாத்து வருகிறது.