இந்திய அரசாங்க இணையச் சந்தை (GeM) மற்றும் UN பெண்கள் அமைப்பு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
GeM வசதியின் உமானியா முன்னெடுப்பின் கீழ், அரசு கொள்முதலில் முறைசாரா துறையைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோரின் பங்களிப்பை மேம்படுத்துவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
மத்திய மற்றும் மாநில அரசு அமைச்சகங்கள், துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளுக்கு நேரடியாகத் தயாரிப்புகளை வழங்க பெண் தொழில்முனைவோர் மற்றும் சுய உதவிக்குழுக்களை (SHGs) GeM அனுமதிக்கிறது.
ஐ.நா. பெண்கள் அமைப்பானது பயிற்சி, உலகளாவிய சிறந்த நடைமுறைகள், வெற்றிக் கதைகள், சரிபார்ப்பு அளவுருக்கள் மற்றும் பெண் பயிற்சியாளர்களை ஒன்று திரட்டும்.
இந்த ஒத்துழைப்பு பாலினம் சார்ந்த நடவடிக்கை சார்ந்த கொள்முதலை ஆதரிக்கிறது, என்பதோடு ஒரு குறிப்பிட்டப் பகுதியின் உள்ளூர் சந்தை இணைப்புகளை வலுப் படுத்துகிறது.