ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் 2021 ஆம் ஆண்டு உமிழ்வு இடைவெளி அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
இது 12வது உமிழ்வு இடைவெளி அறிக்கையாகும்.
மற்ற நாடுகளுடனான தணிப்பு நடவடிக்கைகளுடன் சேர்ந்து தேசங்களின் புதிய பருவநிலை உறுதிப்பாடுகளானது உலக வெப்பநிலையை இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 2.7°C வரையிலான வெப்பநிலை உயர்விற்கான பாதையில் உலகை வைக்கின்றன என்று இந்த அறிக்கை கூறுகிறது.
2020 ஆம் ஆண்டில் ஏற்பட்ட எதிர்பாராத வகையிலான 5.4% சரிவைத் தொடர்ந்து, உலகளாவிய கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகளின் அளவுகள் மீண்டும் முந்தைய நிலைக்குத் திரும்பி வருகின்றன.
வளிமண்டலத்திலுள்ள பசுமை இல்ல வாயுக்களின் செறிவும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.