பஞ்சாப் மாநிலம் எதிர் தேவிந்தர் சிங் வழக்கின் விளக்கத்தின் அடிப்படையில், பட்டியலிடப் பட்ட சாதியினர்/பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் SC/ST இட ஒதுக்கீட்டிலிருந்து உயரடுக்குப் பிரிவினரை விலக்கக் கோரிய பொதுநல வழக்கு (PIL) தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இந்திய உச்ச நீதிமன்றம் அறிக்கை அனுப்பியுள்ளது.
தேவிந்தர் சிங் வழக்கில் (2024) 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு, மிகவும் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு பலன்களைக் கொண்டு சேர்ப்பதற்காக பட்டியலிடப்பட்ட சாதியினருக்குள் (SC) உள் ஒதுக்கீடு செய்ய அனுமதித்ததே தவிர, உயரடுக்குப் பிரிவினரின் விலக்குக்கு அல்ல.
உயரடுக்குப் பிரிவினர் கொள்கையானது இந்திரா சாவ்னி எதிர் இந்திய ஒன்றிய வழக்கில் உருவானதுடன் இதில் OBC (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது, ஆனால் ஒப்பீட்டுச் சமத்துவத்தின் அடிப்படையில் முன்னேறிய பிரிவினர் இதிலிருந்து விலக்கப்பட்டனர்.
1993 ஆம் ஆண்டின் அலுவலக குறிப்பாணை (OM) உயரடுக்குப் பிரிவினரை முக்கியமாக அந்தஸ்தின் அடிப்படையில் (வகுப்பு I/II அரசுப் பதவிகள்) வரையறுத்தது, தலைமுறை தலைமுறையாக உள்ள நிறுவன அதிகாரத்தை அங்கீகரித்தது; இதில் வருமானம் என்பது இரண்டாவதாகவே கருதப்பட்டதுடன், மேலும் சம்பளம் மற்றும் விவசாய வருமானம் அதிலிருந்து விலக்கப் பட்டது.
2004 ஆம் ஆண்டின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் (DoPT) கடிதம் பொதுத் துறை நிறுவனங்களின் (PSU) சம்பளத்தை தகுதியிழப்பாகக் கருதிய நிலையில் இது இந்திய ஒன்றியம் எதிர் ரோஹித் நாதன் வழக்கில் ரத்து செய்யப் பட்டதுடன் மீண்டும் அந்தஸ்து அடிப்படையிலான அளவுகோல்கள் மீட்டெடுக்கப் பட்டன மற்றும் பெற்றோரின் சம்பளம் மட்டுமே உயரடுக்குப் பிரிவினரை தீர்மானிக்க முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டது.
பி.ஆர். அம்பேத்கர் (1932 லோதியன் கமிட்டி குறிப்பு) பணக்கார/படித்த பட்டியலிடப் பட்ட சாதியினரின் (SC) நபர்களை விலக்குவது "தவறானது" என்று கூறியதுடன் சாதி அந்தஸ்து என்பது சமூகத்தைப் பொறுத்தது என்றும் தனிநபர் முன்னேற்றத்தைப் பொறுத்தது அல்ல என்றும் அவர் வாதிட்டார்.
1936 ஆம் ஆண்டு மகர் மாநாட்டில், விளிம்புநிலை சாதிகளைச் சேர்ந்த படித்த மற்றும் பணக்காரர்கள் கூட வேலைகளிலும் பொது வாழ்க்கையிலும் சமூகப் புறக்கணிப்பை எதிர்கொள்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
ஜெயஸ்ரீ பாட்டீல் எதிர் இந்திய ஒன்றிய வழக்கின் தரவுகள், வருமான வரம்புகள் காரணமாக குரூப் D ஊழியர்கள் கூட பலன்களில் இருந்து விலக்கப்பட்டதைக் காட்டிய நிலையில் அதே உச்ச வரம்பு ₹6 லட்சம் மற்றும் ₹24 லட்சம் வருமானம் உள்ள குடும்பங்களைச் சமமாக பாவித்தது.
இட ஒதுக்கீட்டின் தாக்கம் கிராமப்புறங்களில் உள்ள குறைந்த கல்வியறிவு பெற்ற SC உறுப்பினர்களிடையே குவிந்துள்ளது மாறாக அது ஒரு உயர்நிலை உயரடுக்குப் பிரிவினரிடையே அல்ல.
இது ஒரு "உயரடுக்குப் பொறியை" உருவாக்குகிறது: சாதி அடிப்படையிலான பின்னடைவுகள் தொடரும் நிலையில், இந்த வருமான வரம்பு மிதமான நிலையான குடும்பங்களை விலக்குகிறது.
உள்-ஒதுக்கீடு என்பது மிகக் குறைந்த பிரதிநிதித்துவம் கொண்ட SC உட்பிரிவுகளை அடையாளப்படுத்துகிறது, அதே சமயம் உயரடுக்கு விலக்கு என்பது பெற்றோரின் வருமானத்தின் அடிப்படையில் தனிநபர்களை நீக்குகிறது.
SC/ST அளவுகோல்கள் OBC அளவுகோல்களுக்குச் சமமாக இருக்க முடியாது என்பதை நீதிபதி பி.ஆர். கவாய் ஒப்புக் கொண்டார்.
மத்திய அரசின் குரூப் A பதவிகளில் SC/ST பிரதிநிதித்துவம் அவர்களின் மக்கள் தொகை பங்கு மற்றும் ஒதுக்கீட்டை விட சற்று குறைவாகவே உள்ளது; நிரப்பப்படாத பின்னடைவுப் பணியிடங்கள் அப்படியே உள்ளன.
உயரடுக்கு முறையை SC/ST பிரிவினருக்கு விரிவுபடுத்துவது அரசியலமைப்பு ரீதியாகவும் சமூகவியல் ரீதியாகவும் பலவீனமானது என்று வாதிடப்படுகிறது; உள்-ஒதுக்கீடு மற்றும் உயரடுக்கு பிரிவினர் ஆகியவை வெவ்வேறு வழிமுறைகள் என்பதை தெளிவுபடுத்த நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.