TNPSC Thervupettagam

உயர்கல்வி மசோதா 2025

December 18 , 2025 15 hrs 0 min 46 0
  • மத்திய அரசானது, 2025 ஆம் ஆண்டு விக்சித் பாரத் சிக்சா அதிஷ்தான் மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்த மசோதா இந்தியாவின் உயர்கல்வி ஒழுங்குமுறை கட்டமைப்பைச் சீர்திருத்தம் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பல்கலைக்கழக மானியக் குழு (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி சபை (AICTE), மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி சபை (NCTE) ஆகியவற்றை இணைத்து, ஒரே உயர் நிலைக் கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்குவதை இந்த மசோதா முன்மொழிகிறது.
  • மூன்று சபைகளுடன் சேர்த்து, விக்சித் பாரத் சிக்சா அதிஷ்டானை ஓர் உச்ச அமைப்பாக நிறுவுவதற்கு இந்த மசோதா விதிகளை வழங்குகிறது:
    • விக்சித் பாரத் சிக்சா வினியமான் பரிஷத் (ஒழுங்குமுறை சபை)
    • விக்சித் பாரத் சிக்சா குன்வட்டா பரிஷத் (அங்கீகார சபை)
    • விக்சித் பாரத் சிக்சா மானக் பரிஷத் (தரநிலை சபை)
  • இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் இந்தச் சட்டத்தின் கீழ் வெளிப்படையாக சேர்க்கப்பட்டுள்ளன.
  • 10 மற்றும் 11 ஆகிய பிரிவுகள், எதிர்கால விதிமுறைகள் மூலம் நிறுவன சுயாட்சியைப் பாதுகாப்பதோடு, அங்கீகாரம் மற்றும் இணக்கம் குறித்த அதிகாரங்களுடன் ஓர் ஒழுங்குமுறை சபையை நிறுவுகின்றன.
  • இந்த மசோதா மத்திய, மாநில, தனியார், நிகர்நிலை, இணைக்கப்பட்ட, தன்னாட்சி, தொழில்நுட்ப, ஆசிரியர், திறந்தவெளி, இயங்கலை மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்குப் பொருந்தும் என்பதால், சட்டரீதியானச் சீர்திருத்தத்தை 2020 ஆம் ஆண்டு தேசியக் கல்விக் கொள்கை (NEP) உடன் இணைக்கிறது.
  • உயர்கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான 13 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பை அமைப்பதற்கான மசோதாவை மக்களவை பாராளுமன்றத்தின் கூட்டுக் குழுவிற்குப் பரிந்துரைக்கிறது.
  • அந்தக் கூட்டுக் குழுவில் மக்களவையின் 21 உறுப்பினர்களும், மாநிலங்களவையின் 10 உறுப்பினர்களும் இருப்பார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்