உயர்கல்வி மொத்த சேர்க்கை விகிதத்தில் (GER) தமிழ்நாடு
July 13 , 2026 16 hrs 0 min 31 0
அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பு (AISHE) 2023-24-இன் படி, இந்தியாவில் உயர் கல்வியில் அதிக மொத்த சேர்க்கை விகிதத்தை (GER) தமிழ்நாடு பதிவு செய்துள்ளது.
தமிழ்நாட்டின் GER 52.3% ஆக அதிகரித்துள்ளது என்பதோடு இது முதல் முறையாக 50%-ஐத் தாண்டி யுள்ளது.
மாநிலத்தில் உள்ள 18-23 வயதுக்குட்பட்ட 68.4 லட்சம் இளைஞர்களில் சுமார் 35.8 லட்சம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.
மாநிலத்தில் 2,983 கல்லூரிகள் உள்ளன என்ற நிலையில் இது முந்தைய ஆண்டை விட 70 கல்லூரிகள் அதிகமாகும்.
உயர்கல்வியில் மாணவியரின் சேர்க்கை விகிதம் (GER) 53.1% ஆகவும், மாணவர்களின் சேர்க்கை விகிதம் 51.6% ஆகவும் பதிவாகியுள்ளது.