உயர்திறன் பெற்ற புலம் பெயர்ந்தோர்க்கான வாய்ப்பு – அமெரிக்கா
July 12 , 2019 2201 days 702 0
அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையானது நிரந்தரக் குடியுரிமை அட்டைக்கான (கிரீன் கார்டு) விண்ணப்பதாரர் மீதான நாடு சார்ந்த ஏழு சதவீத உச்ச வரம்பை நீக்குவதற்கானச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
ஒரு நிரந்தரக் குடியுரிமை அட்டையானது அமெரிக்க குடிமகன் அல்லாதோர் அங்கு நிரந்தரமாக வாழவும் பணிபுரியவும் அனுமதிக்கின்றது.
இதனால் குறிப்பாக H-1B பணி நுழைவு இசைவுச் சீட்டு அடிப்படையில் அமெரிக்காவில் நுழையும் உயர்திறன் உடைய இந்தியத் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் இந்த சட்டப் பூர்வமான வசிப்பிடத்தை அதிக அளவில் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.