உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் திருத்த மசோதா
December 16 , 2021 1343 days 745 0
இந்த மசோதா மீது தனது விவாதத்தினை நிறைவு செய்ததையடுத்து மாநிலங்களவை இந்த மசோதாவினை மக்களவைக்குத் திரும்ப அனுப்பியதைத் தொடர்ந்து இந்த மசோதா நிறைவேற்றப் பட்டது.
இது ஒரு பண மசோதா என்பதனால் மக்களவைக்குத் திரும்ப அனுப்பப் பட்டது.
இந்த மசோதாவானது 1958 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் (ஊதியங்கள் மற்றும் பணி நிலை) சட்டம் மற்றும் 1954 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதிகள் (ஊதியர்கள் மற்றும் பணிநிலை) சட்டம் ஆகியவற்றைத் திருத்த முனைகிறது.
இந்தச் சட்டங்களானது இந்தியாவிலுள்ள உயர்நீதிமன்ற மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் பணிநிலை மற்றும் ஊதியங்களை ஒழுங்குமுறைப் படுத்துகின்றன.