2019ம் ஆண்டு ஆகஸ்டு 2ம் தேதி பல்கலைக்கழக மானியக் குழு 20 கல்வி நிறுவனங்களுக்கு உயர்புகழ் நிறுவனங்கள் என்ற தகுதி வழங்கப்பட பரிந்துரை செய்திருக்கின்றது.
இந்த 20 கல்வி நிறுவனங்களில் மதராஸ் ஐஐடி, கரக்பூர் ஐஐடி, டெல்லிப் பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், அம்ரிதா விஸ்வ வித்யா பீடம் மற்றும் விஐடி உள்ளிட்டவை அடங்கும்.
2018ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், இந்தியாவை உலக கல்வி வரைபடத்தில் வைக்கும் வகையில் 20 உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை மேம்படுத்துவதை எண்ணுகின்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசு கல்வி நிறுவனங்கள் 1000 கோடி ரூபாயை அரசு நிதியாகப் பெறும். அதேவேளையில் இதில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் இத்திட்டத்தின் கீழ் எவ்வித நிதியையும் பெறாது.