மகாராஷ்டிரா மாநிலமானது முதலாவது உயர்லட்சிய பிராந்தியத் தலைமைத்துவ விருதினைப் பெற்றுள்ளது.
இந்த விருதானது ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்ற உச்சி மாநாட்டுடன் ஒருங்கே நடைபெற்ற அண்டர்2 கூட்டணி பொதுச் சபையில் (Under2 Coalition General Assembly) வழங்கப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலமானது பசுமை இல்ல வாயு உமிழ்வுத் தணிப்பு நடவடிக்கைக்கான பிராந்திய அரசுகளின் உலகளாவிய அண்டர்2 கூட்டணியில் ஜூலை மாதத்தில் இணைந்தது.
மகாராஷ்டிரா மாநிலமானது பருவநிலைக் கூட்டிணைவுகள் மற்றும் புதுமையான பருவநிலைத் தீர்வுகள் ஆகிய மற்ற இரு பிரிவுகளில் அதிக மதிப்புகளைப் பெற்றது.
கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் கியூபெக் ஆகிய நகரங்கள் இந்த இரு பிரிவுகளில் விருதுகளை வென்றன.
அண்டர்2 என்ற ஒரு கூட்டணியானது பருவநிலை நடவடிக்கைக்காக உறுதிப்பாடு மேற்கொண்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் அடங்கிய மிகப்பெரிய ஒரு உலகக் கட்டமைப்புகளுள் ஒன்றாகும்.
சத்தீஸ்கர், ஜம்மு & காஷ்மீர், தெலுங்கானா மற்றும் வங்காளம் ஆகியவையும் இந்தக் கூட்டணியின் ஓர் அங்கமாகும்.