இந்தியா 2030 ஆம் ஆண்டிற்குள் உயர் நடுத்தர வருமானம் கொண்ட நாடாகவும், 2028 ஆம் ஆண்டுக்குள் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும் மாறும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
உலக வங்கியானது குறைந்த வருமானம், குறைந்த நடுத்தர வருமானம், உயர் நடுத்தர வருமானம் மற்றும் உயர் வருமானம் கொண்ட நாடுகளை அமெரிக்க டாலரில் அவற்றின் தனிநபர் மொத்த தேசிய வருமானம் (GNI) மூலம் வகைப்படுத்துகிறது.
உயர் நடுத்தர வருமான நாட்டிற்கான வரம்பு சுமார் 4,500 டாலர் என்ற தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகும்.
2024 ஆம் ஆண்டு தரவுகளின்படி, 26 நாடுகள் மட்டுமே குறைந்த வருமானம் கொண்ட நாடுகளாக உள்ளன, 50 நடுத்தர வருமானம், 54 உயர் நடுத்தர வருமானம் மற்றும் 87 நாடுகள் உயர் வருமானம் கொண்டவை ஆகும்.
இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1961 ஆம் ஆண்டில் சுமார் 90 டாலரிலிருந்து 2007 ஆம் ஆண்டில் 910 டாலராக உயர்ந்ததுடன், 2007 ஆம் ஆண்டில் கீழ் நடுத்தர வருமான வகையிலிருந்து முன்னேறியது.