TNPSC Thervupettagam

உயர் நீதிமன்றத்தின் லடாக் அமர்வு

August 25 , 2026 16 hrs 0 min 41 0
  • ஒன்றியப் பிரதேசமான (UT) லடாக்கில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர அமர்வை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • தற்போது இந்த உயர் நீதிமன்றம் ஸ்ரீநகர் மற்றும் ஜம்முவில் அமர்வுகளைக் கொண்டு உள்ளது; லடாக் அமர்வு இதன் மூன்றாவது நீதித்துறை மையமாக மாறும்.
  • இந்த அமர்வு ஜம்மு அல்லது ஸ்ரீநகருக்குச் செல்வதைக் குறைப்பதன் மூலம், லடாக்கின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு நீதிக்கான அணுகலை மேம்படுத்தும்.
  • 2026 ஆம் ஆண்டு ஜூலை 30 நிலவரப்படி, உயர் நீதிமன்றத்தில் 44,557 வழக்குகள் நிலுவையில் உள்ளன, இதில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள 6,100-க்கும் மேற்பட்ட வழக்குகளும் அடங்கும்.
  • முன்னாள் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மறுசீரமைக்கப்பட்ட பிறகு, 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 31 அன்று லடாக் ஒரு ஒன்றியப் பிரதேசமாக மாறியது.
  • ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றமானது, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய ஒன்றியப் பிரதேசங்களுக்கான பொதுவான உயர் நீதிமன்றமாகும்.
  • பம்பாய் உயர் நீதிமன்றம் மும்பையில் அதன் முதன்மை அமர்வையும், நாக்பூர், அவுரங்காபாத், பனாஜி மற்றும் கோலாப்பூர் ஆகிய இடங்களில் பிற அமர்வுகளையும் கொண்டு மொத்தம் ஐந்து மையங்களில் செயல்படுகிறது.
  • அவுரங்காபாத் அமர்வு அதிகாரப்பூர்வமாக சத்ரபதி சாம்பாஜிநகர் அமர்வு என்று அழைக்கப் படுகிறது.
  • பனாஜி அமர்வு கோவா மாநிலத்திற்கும், மற்ற இடங்கள் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளுக்கும் சேவை செய்கின்றன.
  • முதன்மை அமர்விலிருந்து வெகு தொலைவில் வசிக்கும் மக்களுக்கு நீதியை எளிதில் கிடைக்கச் செய்யவே உயர் நீதிமன்ற அமர்வுகள் நிறுவப்படுகின்றன.
  • 1861 ஆம் ஆண்டின் இந்திய உயர் நீதிமன்றங்கள் சட்டத்தின் கீழ் 1862 ஆம் ஆண்டில் பம்பாய் உயர் நீதிமன்றம் நிறுவப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்