உயிரணுக்களில் புரதத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறை
October 6 , 2024 286 days 229 0
Wntless (WLS) எனும் புரதத்தை உள்ளடக்கிய புதிய செயல்முறையை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
முதுகெலும்புகள் கொண்ட விலங்குகளின் (முதுகெலும்பிகள்) உறுப்புகளின் பெரும் வளர்ச்சிக்கு இது முக்கியமானது.
செல்களுக்குள் புரதங்கள் எவ்வாறு நகர்கின்றன என்பதை நன்கு விளக்க இந்தக் கண்டுபிடிப்பு உதவுகிறது.
WLS என்பது உயிரணு சவ்வுகளில் காணப்படும் ஒரு புரதம் என்பதோடு Wnt3a எனப் படும் மற்றொரு புரதத்தை வெளியிடுவதற்கு ஒரு முக்கியமான புரதமுமாகும்.
Wnt3a உயிரின வளர்ச்சியின் ஆரம்பக் கட்டங்களுக்கு வழிகாட்டும் சமிக்ஞைகளுக்கு உதவுகிறது.
புரதங்கள் செல்லில் சரியான இடங்களுக்குச் செல்வதை WLS உறுதி செய்து குடல், நுரையீரல், உள் காது மற்றும் கண்கள் போன்ற உறுப்புகள் சரியாக வளர்ச்சியடைய உதவுகிறது.