BIRAC–RDI (உயிரி தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சி உதவி மன்றம்–ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு) நிதிக்கான முதல் தேசிய அளவிலான அழைப்பை மையம் அறிவித்தது.
தற்போதைய ₹2,000 கோடி நிதியானது, ஜூலை 2025 இல் மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப் பட்டு, நவம்பர் 2025 இல் தொடங்கப்பட்ட சுமார் ₹1 லட்சம் கோடி RDI முயற்சியின் ஒரு பகுதியாகும்.
இது அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் கீழ் செயல்படுத்தப்பட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.