உயிரினப் பாகுபாட்டிற்கு எதிரான உலக தினம் 2026 – ஜூன் 05
June 9 , 2026 150 days 234 0
ஓர் உயிரினம் மற்ற உயிரினங்களை விட உயர்ந்தது என்ற நம்பிக்கையான 'உயிரினப் பாகுபாட்டிற்கு' எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
"ஸ்பீசிசம்" (Speciesism) என்ற வார்த்தையை ரிச்சர்ட் டி. ரைடர் உருவாக்கினார், பின்னர் பீட்டர் சிங்கர் தனது Animal Liberation என்ற புத்தகத்தின் மூலம் இதனைப் பிரபலப் படுத்தினார்.
விலங்குகளும் சமமான தார்மீகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என்பதையும், அவற்றின் இனத்தின் அடிப்படையில் அவை பாகுபாடு காட்டப்படக்கூடாது என்ற கருத்தையும் இத்தினம் ஊக்குவிக்கிறது.
பீட்டா மற்றும் ஃபார்ம் (FARM - பண்ணை விலங்கு உரிமைகள் இயக்கம்) போன்ற அமைப்புகளால் இது ஆதரிக்கப்படுகிறது.
இத்தினம் விலங்குகள் நலன், விலங்குகளை நெறிமுறையாக நடத்துதல், நிலையான வாழ்க்கை முறைகள் மற்றும் உணவு, உடை, பொழுதுபோக்கு மற்றும் ஆராய்ச்சிகளில் விலங்குகளைச் சுரண்டுவதைக் குறைப்பது குறித்த விவாதங்களை ஊக்குவிக்கிறது.