புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சகம் (MNRE) ஆனது, 2021–26 ஆம் ஆண்டிற்கான தேசிய உயிரி எரிசக்தித் திட்டத்தின் (NBP) கீழான அதன் வழி காட்டுதல்களை புதுப்பித்துள்ளது.
இது தூய்மையான ஆற்றலை ஊக்குவிப்பதற்கும் வணிகச் செயல்முறைகளை மிகவும் நன்கு எளிதாக்குவதற்குமானதாகும்.
இந்தப் புதிய விதிகள் ஆனது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் (MSME) உயிரி எரிசக்தி துறையில் எளிதாக இணைய உதவும்.
செயல்திறன் அடிப்படையில் மத்திய நிதி உதவி (CFA) ஆனது வழங்கப்படும்.
80 சதவீதத்திற்கு மேலான செயல்திறன் கொண்டு இயங்கும் ஆலைகளுக்கு முழு நிதி ஆதரவும், அதற்குக் கீழே உள்ள ஆலைகளுக்குப் பகுதியளவு நிதி ஆதரவும் வழங்கப் படும்.
டெல்லி, பஞ்சாப், ஹரியானா, இராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் தேசியத் தலைநகரப் பிராந்தியம் (NCR) போன்ற சில பகுதிகளில் உள்ள உயிரி எரிபொருட்கள் உற்பத்தியாளர்கள் MNRE அல்லது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து (CPCB) இவற்றுள் எது அதிகப் பலன் வழங்குகிறதோ அதனிடமிருந்து நிதி ஆதரவைப் பெறுவதை தேர்வு செய்யலாம்.
இந்த சில மாற்றங்களானது பயிர்த் தாளடி எரிப்பதைக் குறைத்தல், காற்றின் தரத்தை மேம்படுத்துதல், தூய்மையான ஆற்றலை ஊக்குவித்தல் மற்றும் வணிகங்கள் உயிரி எரிசக்தித் தொழில்நுட்பங்களை ஏற்றுக் கொள்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.