உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 100 அதிக ஆபத்துள்ள மாவட்டங்களில் தரவு சார்ந்த உயிரிழப்பு இல்லா சாலைப் பாதுகாப்புத் திட்டத்தை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைகள் அமைச்சகம் (MoRTH) தொடங்கியது.
விபத்துத் தரவு, முக்கியமான இட வரைபடம் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட அமலாக்கம் ஆகியவற்றைப் பயன்படுத்தி 2023-24 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 89,000 உயிரிழப்பு பதிவான சாலை விபத்து இறப்புகளை 2030 ஆம் ஆண்டுக்குள் சுமார் 50% குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
குறைந்த செலவிலான சாலைப் பாதுகாப்புத் திட்டங்கள், மேம்பட்ட அதிர்ச்சி நல சேவை, ஆம்புலன்ஸ் சேவை வழங்கீட்டிற்கான வரைபடம், முதல் கட்ட நடவடிக்கை பயிற்சி மற்றும் பொது விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் ஆகியவை முக்கிய நடவடிக்கைகளில் அடங்கும்.
இந்த மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள், போக்குவரத்து அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விபத்துத் தடுப்புக் குழுக்களை அமைத்து இதன் அமலாக்கத்தினை மேற்பார்வையிடுவார்கள்.
இந்த முன்னெடுப்பு ஸ்டாக்ஹோம் சாலைப் பாதுகாப்புப் பிரகடனம் (2020) மற்றும் ஐக்கிய நாடுகளின் நிலையான மேம்பாட்டு இலக்குகளுடன் ஒத்துப்போகிறது.