TNPSC Thervupettagam

உயிரி அடிப்படையிலான PLA நெகிழிகள் உற்பத்தி

September 27 , 2026 4 days 53 0
  • BioE3 (பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வேலைவாய்ப்பிற்கான உயிரி தொழில் நுட்பம்) கொள்கையின் கீழ் உயிரி அடிப்படையிலான மக்கும் பாலி லாக்டிக் அமில (PLA) நெகிழிகளின் வணிகப் பயன்பாட்டு மாற்றம் மற்றும் சோதனை அளவிலான உற்பத்தியை இந்தியா தொடங்கியுள்ளது.
  • கரும்பு வெல்லப்பாகு மற்றும் சக்கை போன்ற வேளாண் மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உத்தரப் பிரதேசத்தின் கும்ப்ஹியில் ஆண்டுக்கு 100 டன் (TPA) உற்பத்தி செய்யும் சோதனை ஆலை நிறுவப்பட்டு வருகிறது.
  • PLA என்பது கரும்பு, மக்காச்சோளம் மற்றும் மரவள்ளிக்கிழங்கு போன்ற நொதிக்கப் பட்ட தாவரப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு உயிரி அடிப்படையிலான வெப்பத்தால் இளகும் நெகிழி ஆகும்.
  • PLA நெகிழியை தொழில்துறை ரீதியாக உரமாக மாற்ற முடியும், மேலும் பொருத்தமான சூழ்நிலைகளில் இது நீர், கார்பன் டை ஆக்சைடு மற்றும் கரிமப் பொருட்களாகச் சிதைவடைகிறது.
  • இது பெட்ரோலியம் சார்ந்த நெகிழிகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து விவசாயக் கழிவுகளைப் பயனுள்ள பொருட்களாக மாற்றும்.
  • மக்கும் பேக்கேஜிங்/பொதியிடல், விவசாயப் படலங்கள் மற்றும் நுகர்வோர் பொருட்களில் PLA பயன்படுத்தப்படலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்