TNPSC Thervupettagam

உயிரி ஆற்றல் திறன் வளர்ச்சி 2025

December 22 , 2025 4 days 84 0
  • கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா 2,362 மெகாவாட் உயிரி ஆற்றல் சார் மின்சாரத்தையும், கழிவிலிருந்து ஆற்றல் மூலம் 228 மெகாவாட் அளவிலான திறனையும் சேர்த்தது.
  • இந்தக் காலக் கட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 2.88 லட்சம் உயிரி எரிவாயு ஆலைகள் நிறுவப்பட்டன.
  • 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி இந்தியாவின் மொத்த நிறுவப்பட்ட உயிரி ஆற்றல் உற்பத்தித் திறன் 11.6 ஜிகாவாட்டாக எட்டியுள்ளது.
  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ஆனது, தேசிய உயிரி ஆற்றல் திட்டத்தின் (NBP) (2021–22 முதல் 2025–26 வரை) கீழ் உயிரி ஆற்றல் திட்டங்களை ஆதரிக்கிறது.
  • கிராமப்புறங்களில் இருந்து பெறப்படும் உபரி உயிரி எரிசக்தியை மின் உற்பத்திக்கு பயன்படுத்துவதையும் கிராமப்புற வீடுகளுக்கு கூடுதல் வருமானத்தை வழங்குவதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உயிரி ஆற்றல் என்பது தாவரங்கள் மற்றும் கழிவுகள் போன்ற கரிமப் பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஆற்றலாகும் என்பதோடு, மேலும் இது இந்தியாவில் தூய்மையான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியை ஆதரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்