வேளாண் கழிவுகளிலிருந்துத் தயாரிக்கப்பட்ட உயிரி செங்கல்லால் ஆன இந்தியாவின் முதல் கட்டிடமானது ஹைதராபாத்தின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி கழகத்தில் திறக்கப் பட்டுள்ளது.
இந்த மாதிரிக் கட்டிடமானது ஓர் உலோகக் கட்டமைப்பின் தாங்குதலோடு உயிரி செங்கல் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் வெப்பத்தைத் தணிப்பதற்காக பாலி வினைல் குளோரைடு தகடின் மீது உயிரி செங்கல் வைத்து கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இது இந்த வகை செங்கல்லின் வலிமை மற்றும் பலபடித் தன்மையை நிரூபிப்பதற்கான ‘Bold Unique Idea Lead Development (BUILD)’ என்ற திட்டத்தின் ஓர் அங்கமாகும்.