உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவதைத் தடுக்கும் சட்டம்
April 29 , 2025 2 days 23 0
1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டவிரோதமாக பொருள் விற்பனை செய்வோர், இணைய வெளிக் குற்றம் சார் சட்டக் குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தும் குற்றவாளிகள், வனப் பொருட்கள் கடத்தல் குற்றவாளிகள், குண்டர்கள், மோசமான கடத்தல் குற்றவாளிகள், மணல் கடத்தல் குற்றவாளிகள், பாலியல் குற்றவாளிகள், குடிசைப் பகுதிகளை ஆக்கிரமிப்பவர்கள் மற்றும் திரைப்படத்தின் மீது திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் ஆகியோரின் சட்ட விரோதச் செயல்களைத் தடுக்கும் சட்டத்தினைத் திருத்தியமைப்பதற்கான மசோதாவினை தமிழ்நாடு அரசு மாநிலச் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியத் தண்டனைச் சட்டம், 1860, மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டம், 1973 ஆகியவை ரத்து செய்யப்பட்டு, முறையே பாரதிய நியாய சன்ஹிதா, 2023 மற்றும் பாரதிய நாகரிக சுரக்சா சன்ஹிதா, 2023 என்பதாக மீண்டும் அவை இயற்றப் பட்டதாகவும் இந்த மசோதா கூறுகிறது.
எனவே, சில பின்விளைவினை ஏற்படுத்தும் திருத்தங்களை 1982 ஆம் ஆண்டின் 14வது சட்டமான தமிழ்நாடு சட்டம் என்ற சட்டத்தில் மேற்கொள்ள வேண்டும்.
உயிரி மருத்துவக் கழிவு தொடர்பான குற்றவாளிகள் மீது 1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு தடுப்புச் சட்டத்தின் திருத்த மசோதாவின்படி, குண்டர்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் படும்.